பொம்மைக்கு விசிறிகளா?
எழுதியவர்
ஷாந்தகுமார்,
பேசும் பொம்மைக் கலைஞர் & மந்திர நிபுணர்
கைப்பேசி: 94441 48832
ஆம்! இந்த பொம்மைகள் பேசும்! எனவே இவற்றிற்கு விசிறிகளும்
உண்டு.
என்ன? பொம்மைகள் பேசுமா? உண்மையில் பொம்மை பேசாது. ஆனால் அதற்கு உயிர் கொடுத்து பேசுவது போல்
செய்பவரே பொம்மையை ஆட்டி வைக்கும் கலைஞர் தான்.
உண்மையில் அவர்தான் பொம்மைக்கு குரல் கொடுக்கிறார். இக்கலைக்கு ஆங்கிலத்தில் “ventriloquism” என்று பெயர்.
தமிழில் இக்கலையை மாயக்குரல் கலை என்று சொல்லலாம்.
இக்கலைக்கு “ventriloquism” என்று ஏன் பெயர் வந்தது? “ventri” என்றால் வயிற்றுப்பகுதி.
இக்குரலை வயிற்றில் இருந்து கொண்டுவர வேண்டும்.
மேலும் பொம்மை பேசும்போது இக்கலைஞரின் உதடுகள்
அசையக்கூடாது. இதற்கு சீரிய பயிற்சி தேவை.
அதே சமயம் பொம்மைக்கு உயிர் கொடுக்கும்
வகையில் பொம்மையைக் கையாள வேண்டும்; ஆட்டுவிக்க வேண்டும்!
மாயக்குரல் கலைஞர் எப்படி உருவானார்?
சென்னையில் வசிக்கும் திரு சாந்தகுமார் 1977-ல் முதல் முறையாக திரு. எம்.எம். ராய்
என்பவருடைய மாயக்குரல் நிகழ்ச்சியை மியூசிக் அகாடமியில் பார்த்து
மகிழ்ந்தார்.
அந்நிகழ்ச்சியில் திரு. ராயுடைய உதடு அசையாமல்
இருக்கவே, ஒரு வேளை பொம்மையின்
வயிற்றுக்குள் டேப் ரெக்கார்டர் வைத்து பேச வைக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்தது.
குரு திரு. எம்.எம். ராய் அவர்களை 1977-இல் அவர் பார்த்தபோது:
குரு திரு. எம்.எம். ராய் அவர்களை 1977-இல் அவர் பார்த்தபோது:
ஆனால் அப்பொம்மை “மைக்கை சரி செய்யுங்க!” என்று அதட்டல்
போடவே, அது கண்டிப்பாக டேப் ரெகார்டராக இருக்காது என்று கண்டுபிடித்தார்.
இது குறித்த சந்தேகத்தை தன் நண்பரிடம் கேட்டார். அப்பொழுது அவர் இக்கலையைப்பற்றி விவரிக்கவே
இக்கலையில் ஒரு ஈடுபாடு வந்தது.
பிறகு கே. பாலச்சந்தரின் “அவர்கள்” சினிமா வெளிவந்ததும்,
இக்கலை எல்லாருக்கும் வெளிச்சத்துக்கு வந்து பிரபல்யமானது.
கல்லூரி நாட்களிலிருந்து நகைச்சுவையில் ஈடுபாடு கொண்ட
சாந்தகுமார் 1993–ல் நகைச்சுவை மன்றத்தில் சேர்ந்தார். ஜோக்குகளைப் பரிமாறினார். மற்ற நண்பர்கள் மிமிக்ரி, மைமிங் போன்ற பல புதுமையான
நிகழ்ச்சிகளை வழங்கினர். இவருக்கும்
ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று தோன்றியது. அவர் எண்ணமும் கைகூடியது. எப்படி?
1997-ல் திரு. ராயை ஒரு நகைச்சுவை மன்றத்தில்
மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அங்கு நிகழ்ச்சி கொடுக்க வந்திருந்தார் திரு. ராய்.
நிகழ்ச்சி முடிந்ததும் திரு. ராயிடம் தனக்கு இக்கலையை
சொல்லிக்கொடுக்க இயலுமா என்று கேட்டார் சாந்தகுமார். அவரும் இசைந்தார். தமிழ்நாட்டில் ஒரு புதிய கலைஞர் உருவானார்.
1997-இல் அவருடைய குரு நிகழ்ச்சி வழங்குவதற்கு முன்பு, அவர் ஜோக்ஸ் பரிமாறும் காட்சி:
இப்புகைப்படத்தை பின்பு ஒரு நாள் அவருடைய குருதான் அவருக்கு கொடுத்தார்.
1997-இல் அவருடைய குரு நிகழ்ச்சி வழங்குவதற்கு முன்பு, அவர் ஜோக்ஸ் பரிமாறும் காட்சி:
இப்புகைப்படத்தை பின்பு ஒரு நாள் அவருடைய குருதான் அவருக்கு கொடுத்தார்.
பொம்மைக்கு விசிறிகள்!
சாந்தகுமார் இக்கலையைக் கடந்த 18 வருடங்களாக செய்து வருகிறார். துபாய், குவைத், சிங்கப்பூர்,
மலேஷியா, மற்றும் சீஷெல்ஸ் போன்ற மேல் நாடுகளிலும்
நிகழ்ச்சிகள் வழங்கியுள்ளார். இந்த கால கட்டத்தில் பொம்மைக்குக் கிடைத்த
விசிறிகளைப்பற்றி கேட்டோம். அவருடைய
அனுபவங்களை அவரே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
துபாயில்:
துபாயில் காணொலி:
சீஷெல்ஸில்:
சீஷெல்ஸில் காணொலி:
குவைத்தில்:
மலேசியாவில் காணொலி:
என்னுடைய நிகழ்ச்சியில் நான் ஜானி என்ற பையன் பொம்மையையும்,
ஜாக் எனும் குரங்கு மற்றும் ராணி எனும் பெண் பொம்மையையும் உபயோகிக்கிறேன். மேலும் அமெரிக்காவிலிருந்து வாங்கிய வெள்ளை
பலகையையும், ஒரு மைக் மற்றும் எலும்புக்கூடு பொம்மையையும் கூட பயன்படுத்துகிறேன்.
பல பிரபலங்களுடன்:
கோழி முட்டை ஜோக்
இப்பொம்மைகள் ஜோக்குகள் சொல்லும். பாடல்கள் பாடும். நிகழ்ச்சியை கண்டு களிக்கும் மக்களின் கவனத்தை
இழுக்க சில நகைச்சுவை கேள்விகள் கேட்பது வழக்கம்.
அப்படி ஒரு கேள்வியை ஜேசீஸ் க்ளப் கூட்டத்தில் ஜானி
கேட்டான். கேள்வி இது தான்...
“ஒரு கோழி ஒரு நாளைக்கு ஒரு முட்டை போட்டால், ஒரு வாரத்தில்
எத்தனை முட்டை போடும்?”
ஒரு சிறுவன் எழுந்தான்... “பத்து!” என்றான்.
“எப்படி?” இது நான்.
“எங்க வீட்டுக் கோழி சில நாள் இரண்டு முட்டை கூட போடும்
அங்கிள்!” என்றதும் அவன் பெற்றோர் உட்பட அனைவரும் மத்தாப்பு மாதிரி சிரித்தனர்.
பின்பு ஜானி சரியான விடையைக் கூறினான். “ஒரு வாரத்தில் ஆறு
முட்டைதான் போடும். ஏன்னா ஞாயிறு
விடுமுறை!!” மீண்டும் சிரிப்பலை!
என் பேரனின் ஜோக்
அமெரிக்காவில் ரான் லூகாஸ் எனும் ஒரு சிறந்த மாயக்குரலோன்
இருக்கிறார். அவரிடம் எனக்கு பிடித்தது...
ஒரு பாடலை அவரும் அவருடைய டைனசோர் பொம்மையும் மிக வேகமாக மாற்றி மாற்றிப் பாடுவார்கள்—1000 வாலா வெடி போல!.
சற்றே வேகமான ஒரு ஆங்கில பாடலை நானும் தேர்வு
செய்தேன். நானும் பொம்மையும் அந்த பாடலைப்
பாடிப் பயிற்சி செய்தோம்.
என் பேரனுக்கு அப்பொழுது நான்கு வயதிருக்கும். அவன் பொம்மை பாடும் அழகையே பார்த்து ரசித்துக்
கொண்டிருந்தான்.
திடீரென்று பொம்மையைப் பிடிங்கினான். இரண்டு நிமிடங்கள் ஆவலுந்த அதையே உற்றுப்
பார்த்தான்—பட்டாசு திரியில் நெருப்பு வைத்துவிட்டு காத்திருக்கும் சிறுவனைப்போல!. பின்பு அவன் முகத்தில் புஸ்வானம் போன மாதிரி ஏமாற்றம். “என்ன க்ராண்ட்பா... இப்ப இந்த பொம்மை பாட மாட்டேங்குது!” என்று கேட்டதும்
அருகில் இருந்தவர்கள் அனைவரும் வாய் விட்டு சிரித்தார்கள்.
ஜானியை விட நல்ல ஜோக் சொன்ன சிறுவன்
நான் ஜானியிடம் சில கேள்விகள் கேட்பது வழக்கம். அதற்கு வித்தியாசமான பதில்கள் சொல்லி
அனைவரையும் சிரிக்க வைப்பது அவனுக்கு கை வந்த கலை.
அப்படிப்பட்ட சில கேள்விகள் இதோ...
நான்: அக்பர் எப்போது பிறந்தார்?
ஜானி: அவர் பெர்த் டே அன்னிக்கி பிறந்தாரு!
நான்: ஒரு பஸ்ஸில் கண்டக்டர் தூங்குவதற்கும், டிரைவர்
தூங்குவதற்கும் என்ன வித்தியாசம்?
ஜானி: கண்டக்டர் தூங்கினா யாருக்குமே டிக்கட் கிடைக்காது. டிரைவர் தூங்கினா..? எல்லாருக்கும் டிக்கட்!
நான்: பொங்கலுக்கும் தீபாவளிக்கும் என்ன வித்தியாசம்?
ஜானி: பொங்கலன்னைக்கு பொங்கல் சாப்பிடலாம். (சிவாஜி
பாணியில்) ஆனா தீபாவளி அன்னிக்கு தீபாவளி சாப்பிட முடியுமோ?
நான்: தீபாவளிக்கு ட்ரெஸ் எடுத்திட்டியா?
ஜான்: தீபாவளிக்கு எடுக்கலை. எனக்குத்தான் எடுத்தேன்!
நான்: The people in Kerala are called?
ஜானி: Kaeralites!
நான்: The people in Moscow are called?
ஜானி: Mosquitoes!!
உடனே ஒரு சிறுவன் எழுந்தான். “அங்கிள்... நா ஒரு ஜோக் சொல்றேன்!” என்றான்.
நானும் “ஓகே...” என்றேன்.
சிறுவன்: The people in Poland are called? Poles! Likewise the people in Germany are called?
Germs!
ஜானியை விட நல்ல ஜோக்கை சமயோசிதமாக கூறினான். அங்கிருந்த
அனைவரும் கைத்தட்டி அவனைப் பாராட்டினர்.
சிறுவன் சொன்ன நகைச்சுவை பதில்
சில சமயங்களில் ஜானி கேட்கும் கேள்விக்கு சிறுவர்கள்
சொல்லும் பதிலே நகைச்சுவையை உண்டாக்கும்.
ஜானி: ஒரு டீ கோப்பையில் எந்த பக்கத்தில் கைப்பிடி இருக்கு?
பொதுவாக எல்லா சிறுவர்களும் “இடது” அல்லது “வலது” என்று
கூறுவார்கள். ஆனால் ஒரு சிறுவன்
“கோப்பையில தான் ஜானி இருக்கு!” என்றதும் சிரிப்பலை அடங்க வெகு நேரமாகியது.
பிறகு ஜானி அநாயசமாக “வெளிப்பக்கம்!” என்றான்.
சிறுவர்கள் அளிக்கும் சுவையான பதில்கள்
சில கேள்விக்கு பல பிள்ளைகள் அளிக்கும் பதில்கள் எல்லாமே
ரசிக்கும்படி அமைவதுண்டு.
ஜானி: ரஜினிகாந்த் எப்பவுமே கூலா இருப்பாரு. ஏன்?
ஒரு சிறுவன்: அவர் எப்பவுமே ஏ.சி.இல இருக்காரு!
அடுத்தவன்: அவர் அடிக்கடி “கூல் கூல்”னு சொல்றாரு!
மற்றொருவன்: அவர் அடிக்கடி இமயமலை போறாரு!
இந்தப் பதில்களை அனைவரும் ரசித்து சிரித்தனர்.
கடைசியில் ஜானி “இல்லே... அவருக்கு நிறைய விசிறிங்க
இருக்காங்க!” என்று கூறி தன் விசிறிகளை கூலாக்கினான்!
விசிறியான ஒரு போலீஸ் அதிகாரி
பெசன்ட் நகரில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் ஜானியினுடைய
நிகழ்ச்சி நடந்தது. என் வக்கீல் நண்பரும்
ஒரு போலீஸ் அதிகாரியும் தலைமை வகித்தனர்.
ஜானியின் நிகழ்ச்சியைப் பார்த்து வியந்தார் போலீஸ்
அதிகாரி. “அந்த பொம்மை எப்படி பேசுது?
உள்ள டேப் இருக்கா?” என்றார்.
என் நண்பர் இக்கலையைப்பற்றி அவருக்கு விளக்கினார்.
அடுத்த நாள் இன்னொரு நிகழ்ச்சியில் அந்த போலீஸ் அதிகாரியின்
பாராட்டைப் பற்றி மேடையிலேயே நான் பகிர்ந்து கொண்டேன். உடனே ஜானி நக்கலாக, “அவரால உங்க வாய் அசைவையே
கண்டுபிடிக்க முடியலை! அப்புறம் எப்படி திருடர்களைக் கண்டு பிடிக்கப் போறாரு!”
என்று சொல்ல, ஒரே கைத்தட்டல் தான்!
பிறந்த நாள் கொண்டாடிய சிறுவன் அடித்த ஜோக்
நிகழ்ச்சி ஆரம்பித்ததும் நானும் ஜானியும் எங்களை
அறிமுகப்படுத்திக்கொள்வோம்.
நான்: இவர் தான் ஜானி...
ஜானி: அங்கிள்... உங்களை நான் அறிமுகப்படுத்தறேன்...
நான்: படுத்தாதே ஜானி!
ஜானி: படுத்தலை... அறிமுகப்படுத்தறேன்...
நான்: வேணான்னா விடவா போறே... சரி ஜமாய்!
ஜானி: இவர் ஒரு தலை சிறந்த வென்றிகோலிஸ்ட்!
நான்: இல்லே ஜானி... வென்றிலோக்விஸ்ட்!
ஜானி: ஓகே ஓகே... இவரு ஒரு சிறந்த வென்றிகோலிஸ்ட்!
நான்: இல்லை ஜானி... வென்றிலோக்விஸ்ட்! வென்றி சொல்லு
பாக்கலாம்!
ஜானி: வென்றி...
நான்: குட்... லோக்விஸ்ட் சொல்லு...
ஜானி: லோக்விஸ்ட்!
நான்: இப்ப சொல்லு... வென்றிலோக்விஸ்ட்!
ஜானி: வென்றிகோலிஸ்ட்!
இவரைத்தெரியாதவங்க இந்த ஊர்ல யாருமே இருக்க மாட்டாங்க! இவர் பேரு... இவர்
பேரு... (தலையை சொரிந்தவாறே) ஆமா உங்க பேர் என்ன?
நான்: சாந்தகுமார்!
ஜானி: ஆ... அதா இவர் பேரு... நாங்க வராத டி.வி. சேனலே
கிடையாது... தெரியுமா? (ஜானிக்கு ஒரே பெருமை!)
அப்பொழுது பிறந்த நாள் கொண்டாடும் பத்து வயது சிறுவன்
எழுந்து, “அப்ப நீங்க அனிமல் சேனல்ல வந்திருக்கீங்களா?” என்று கேட்டான்.
நாங்கள் எந்த பதிலையும் சொல்ல முடியாத நிலை. போதாததற்கு அவன் நண்பர்கள் கைத்தட்டி ஆரவாரம்
செய்தனர்.
ஜானிக்குப்பதில் ரசிகரின் பதில்
அம்பத்தூர் நகைச்சுவை மன்றத்தில் ஜானியும் நானும் நிகழ்ச்சி
வழங்கினோம். அப்பொழுது ஜானியை நான் சில
கேள்விகள் கேட்கும் பகுதி...
நான்: மீன் சாப்பிட்டா?
ஜானி: கண்ணுக்கு நல்லது!
நான்: மீன் சாப்பிடாட்டா?
ஜானி பதில் சொல்வதற்கு முன் அங்கிருந்த ரசிகர் “மீனுக்கு
நல்லது” என்று சத்தமாக பதில் சொன்னார்.
அனைவரும் சிரித்தனர்.
உடனே ஜானி என்னிடம், “அங்கிள்... இனிமே இந்த ஜோக்
சொல்லாதீங்க!” என்று அதட்டியதும் மீண்டும் சிரிப்பலை.
வங்கியின் பெயர் பட்ட பாடு
அப்பொழுது நான் இந்தியன் வங்கி, ஓவர்சீஸ் கிளையில் வேலை
செய்துக் கொண்டிருந்தேன்.
ஜானியும் நானும் மேடையில் நிகழ்ச்சி துவங்க இருந்தோம். அப்பொழுது கூட்டத்தின் தலைவர் “சாந்தகுமார்
அவர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணி புரிகிறார்!” என்று தவறுதலாக கூறிவிட்டார்.
உடனே ஜானி முந்திரிக்கொட்டைத்தனமாக, “இல்லே இல்லே... இவரு
இந்தியன் வங்கி ஓவர்சீஸ் கிளையில் வேலை செய்கிறார்!” என்றதும் அனைவரும் தீபாவளி
சரவெடி போல சிரித்தனர்.
ஜானியால் எனக்கு கிடைத்த வேலை!
ஜானியும் நானும் பல டிவி நிகழ்ச்சிகள் வழங்கியதால் நான்
போகும் இடங்களில் என்னை அடையாளம் கண்டு கொண்டனர்.
ஸ்டேட் பாங்கில் வீட்டுக்கடன் பகுதியில் கவுன்சிலர் வேலை
இருந்தது. அதற்காக ஒரு கிளை மேலாளரை சந்திக்க சென்றேன். அவர் என்னைப்பார்த்ததும் “கலக்க போவது யாரு
சாந்தகுமார்தானே?” என்று கேட்டார். எனக்கு இன்ப அதிர்ச்சி! என் முகத்தில்
மத்தாப்பு!
அந்தக் கிளையில் இரண்டு பேர் ஏற்கனவே கவுன்சிலராக இருந்ததால்
எனக்கு அந்தக் கிளையில் வேலை கிடைக்க வில்லை.
ஓராண்டு கழித்து மற்றொரு கிளையில் அந்த வேலை
கிடைத்தது. முதல் மூன்று மாதம் எந்த
விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்காதலால் எனக்கு அடையாள எண் கொடுக்க மறுத்து விட்டனர்
மேலதிகாரிகள்.
எனவே இது சம்பந்தமாக வட்டார மேலாளரை சந்திக்கச்
சென்றேன். அவர் பல அலுவல்களில் இருந்ததால்
அனுமதி மறுக்கப்பட்டது. “எனக்கு இரண்டு
நிமிடம் மட்டும் போதும்” என்று சொல்லி அனுமதி பெற்று அவர் அறைக்குள் நுழைந்தேன்.
அவர் என்னை அடையாளம் கண்டு கொண்டு பத்து நிமிடங்கள்
அன்போடு பேசினார். என் நிகழ்ச்சியை அண்ணா
நகர் நகைச்சுவை மன்றத்தில் பார்த்திருக்கிறார்.
உடனே எனக்கு அடையாள எண்ணும் கிடைத்தது.
அந்த வேலை கிடைத்தது ஜானியால்தான் என்று நினைக்கும்போது
எனக்கு பெருமையாக இருக்கிறது. ஜானி
என்றால் ஜாலி! அவனோடு இருப்பதால் தினமும்
எனக்கு தீபாவளிதான்!
என்னுடைய ப்ளாக் வாசகர்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் கிடைக்க
வேண்டுமா? நீங்கள் இக்கலையை சுலபமாக கற்றுக்கொள்ளலாமே! உடனே தொடர்பு கொள்ள: 94441 48832.
(வெளி ஊர்க்காரர்கள் ஸ்கைப் மூலம் கத்துக்கலாம்!)
I request you to go through my
website and other blogs:
www.besteventschennai.com (As Ventriloquist and Event Manager)
MY BLOGS
http://ventshanthakumar.blogspot.com/ (My interview as Ventriloquist)
http://saarang2010.blogspot.com/2010_02_01_archive.html
(Photos of my workshop in Saarang 2010 at IIT, Chennai)
http://shanthakumarszenstories.blogspot.in/ (On Zen stories)
http://myholytour.blogspot.in/ (About
our tour to Holy Land)
http://adversitiesintoopportunities.blogspot.in/
(On self development, A must read)
http://feelhappyever.blogspot.in/ (Tips
to get happiness everyday)
http://dollshanthakumar.blogspot.in/
(My humorous experiences at Ventriloquist)
http://hypnosisforselfdevelopment.blogspot.in/ (Self Hypnosis for self development)
http://hypnosisforselfdevelopment.blogspot.in/ (Self Hypnosis for self development)
--ooOoo--
P R O F I L E
Name
: G.A. Santhakumar
Act : Ventriloquist cum Magician cum Puppeteer
Experience : 20 years
Languages used : Tamil, English and little Hindi
Qualifications : M.A., B.L., CAIIB
Performed : More than 8,000 shows, including
performances in U.A.E.-10
Schools, Seychelles-Tamil
Mandram, Kuwait-Tamil Engineers
Forum, Malaysia-Writers’
Conference and Singapore-Church.
Timings : Usually I do Ventriloquism
with four props, viz. Boy, White
Talking Board, Mask and Girl & Monkey
for 40 minutes
+
magic for 20 minutes
Performed in : In all the TV channels except Animal
Channel.
Ex: Sun TV, Vijay, Jaya, Pothigai,
Raj, Makkal and Chutti
Workshops : IIT (Chennai twice), Bits Pilani
(Goa) & NIT (Trichy twice)
Important clients : Microsoft, Infosys, Wipro, TCS, Isoft,
Mphasis, Oracle, First
Source, Accenture, Visteon, Mind Tree, Tuticorin
Sterlite,
MRF, Apolo
Tyres, L&T, Dalmia Cements, Delhi Tamil
Sangam, Anna
University, MMC, Sathyabama University,
Arunai Eng.
College, World Bank, RBI, SBI, Citi, Bank of
America, Indian
Bank, Standchart, IDBI, NABARD, Canara,
Sriharikotta
Space Centre, GAIL, BHEL, BP, Kalpakkam
Atomic Centre
& Coast Guard @ ship!
Additions
: I can do skits and dance through stage puppets show
I also perform dance through stringed
puppets
I
conduct workshop to teach ventriloquism
Articles published :
English: The Hindu, Indian Express, Ergo & Deccan Chronicle
Tamil: Vikatan, Dinamani Kathir,
Dinamalar, Amudhasurabi
& Ladies Special; Telugu:
Eenaadu
Quotes from them : “Humor
is the choice through his voice” (Hindu)
Banker by profession & ventriloquist by
passion!
Other
activities : Worked in a nationalized Bank for 35
years;
Wrote 29 books (26 in English & 3 in
Tamil)
Trainer on HR
and Banking topics in Engineering Colleges
|
CONTENTS & VIDEO LINKS
Contents :
·
Clean
jokes, songs and comedy quiz
·
Perform
the show to suit the audience
·
Stressing
the importance of positive thinking.
·
Can
add any topic on HR or social issues, like
Environment, ban on plastic,
smoking and drinking.
·
My
favorite subject:
How to convert adversities into
opportunities?
Doll
talking show is a unique one! And humor is the best medicine!
Some call him a
Doctor because he heals many people through humour therapy!
|













Comments
Post a Comment